களுவாஞ்சிகுடி நகரின் பல இடங்களில் இன்றய தினம் (22.05.2015) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படு கொலையினைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்க கோரியும் களுவாஞ்சிகுடி நகரம் பூராக கடையடைப்பு போராட்டம் இடம் பெறுவதுடன் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கபப்படுகின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா(18வயது) கடந்த வாரம் சில காமுகர்களால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ் குற்றவாளிகளுக்கு விரைவில் அதி உச்ச தண்டனை வழங்க கோரி நாடு பூராகவும் பல போராட்டங்கள் கடந்த வாரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய களுவாஞ்சிகுடி மக்கள் சார்பில் இறைவனைப் பிராத்திக்கிறோம்.