9 ஆம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
635

9 ஆம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் Phalsbourg மாநகர சபையில் இருந்து காவற்துறையின் பாதுகாப்பு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

Saverne அரசியல் சந்தப்பின் தொடர்சியாக  Strasbourg மாநகரசபையினை ஊடறுத்து ஐரோப்பிய ஆலோசனைசபை முன்றலில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் நடைபெற்ற வேளையில் ஐரோப்பிய ஆலோசனை சபையின் முக்கிய அதிகாரியுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.  குறிப்பாக தமிழீழத்தில் எம்மக்கள் மீது திட்டமிட்ட முறையில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மற்றும் 2009 ல் கொடூரத்தனமாக இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தியும், தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனோடு மற்றும் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயண செயற்பாட்டாளர்களினாலும் பிரதிநிதிகளினாலும் கலந்துரையாடப்பட்டது. தொடர்சியாக Swiss நாட்டின் எல்லையினை நோக்கி எம் இலக்கிற்காக மனிதநேய ஈருருளிப்பயணம் சென்றுகொண்டு இருக்கின்றது.  

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here