தமிழக முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா இன்று காலை பதவியேற்கிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்பு விழா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் மத்திய அமை ச்சர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். முதல்வராகப் பதவியேற்பதற்கு முன் பாக பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகளை நேற்று வெள்ளிக் கிழமை காலை முதல் மேற்கொள்ளப் பட்டுவந்தன.
அ. தி. மு. க சட்டப் பேரவை குழு தலைவராக ஜெயலலிதா நேற்று காலை தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார்.
தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆளுநர் ரொசய்யாவை சந்தித்து தனது முதல்வர் பதவி விலகலுக்கான ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவை சந்தித்த பிறகு, ஒ பன்னீர் செல்வம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த முதல்வர் ஒ. பன்னீர் செல்வம். தமது முதல்வர் பதவி விலகலுக்கான கடிதத்தை வழங்கினார்.
முதல்வர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.
புதிய அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு ஜெயலலிதாவை ஆளுநர் ரோசய்யா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு சென்று தன்னை முதல்வராக பதவியேற்க அனுமதிக்கும்படி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தையும் கையளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து மீண்டுள்ள ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகிறார்.