பரிசில் இன்று மாலை பாரிய வன்முறை இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை காரணமாக கார்-து-லியோனின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கலைஞர் Fally Ipupa இன் இசை நிகழ்ச்சி AccorHotels முன்றலில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியை கண்டித்து இடம்பெற்று வரும் இந்த போராட்டத்துக்கு பரிஸ் அரசு முன்னதாக தடை விதித்திருந்தது. ஆனால் தடையை மீறி பலத்த வன்முறையுடன் கூடிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கார்-து-லியோன் நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. RER A சேவைகளும் 14 ஆம் இலக்க தானியங்கி மெற்றோவும் தடைப்பட்டுள்ளது.
அரசியல் சார்ந்து மேற்கொள்ளப்படும் Fally Ipupa இன் இசை நிகழ்ச்சியை எதிர்ப்பாளர்கள் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.