ஜெனிவாவில் ஐ.நா.முன்றிலில் வைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை ஆதாரங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட சிறிலங்கா சிங்கள அரச ஆதாரவாளர்கள் கும்பல் பெரும் அடாவடியில் ஈடுபட்டதுடன், தமிழீழத் தேசியத் தலைவரையும் விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தியுள்ளனர்.
அத்தோடு தமிழினப் படுகொலையையும் மூடிமறைத்து பொய்யான தகவல்களை சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் நேரலையாகக் காண்பித்ததுடன், இனப்படுகொலையாளிகளான மகிந்தா, கோத்தா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினர்.
இதேவேளை, கருணா, சரத்பொன்சேகா ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கவில்லையா எனவும் கேட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் கடும் விசனமடைந்துள்ளதுடன், தமது ஆதங்கத்தை சமூக இணையங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.