யாழ். எழுவைதீவைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நேற்று யாழ். வலம்புரி பத்திரிகை அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எழுவைதீவை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியாரின் ஏற்பாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மத நல்லிணக்கத்தை எதிர்பார் த்திருக்கும் இத்தருணத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தன சம்பவங்கள் இடம்பெற்றமை வருத்தமளிக்கிறது.
கடந்த சிவராத்திரி காலத்தில் மன்னாரில் கத்தோலிக்க மதக்கும்பல் மேற்கொண்ட அராஜகம் போன்று இந்த சிவராத்திரி காலத்தில் வலம்புரி ஊடக அலுவலகத்திற்குள் மதத்தின் பெயரால் நுழைந்த அடாவடிக்கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்கள் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகளை ஒத்ததாக, மதக்குழு ஒன்று வன்முறை பாணியில் ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே, கிறிஸ்தவ சபைகள் யாழ்.மாவட்டத்தில் மதமாற்ற செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
இந்த நிலையில், மறைமாவட்டங்கள் மூலம் ஒழுக்க விழுமியங்களை போதிக்கும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள், அதுவும் ஒரு பாதிரியாரின் வழிநடத்தலில் அநாகரிகமான செயற்பாட்டில் ஈடுபட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த (2019) சிவராத்திரி காலத்திலும் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரின் தலைமையில் திருக்கேதீஸ்வரம் வளைவு உடைத்தெறியப்பட்டது. இந்த (2020) சிவராத்திரி காலத்திலும் அதேபோன்று கத்தோலிக்க பாதிரியார் ஒருவரின் வழிநடத்தலில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மத நல்லிணக்கத்திற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. மத நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின் இன நல்லிணக்கம் கேள்விக்குறியாகும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இது குறித்து பொலிஸார் நேர்மையான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்படி மதக்கும்பல் பெயர் கூறிய பாதிரியார் விசாரணக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்முடியும் என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.