மேற்கு ஜேர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர் பலியாகியதுடன், 5 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மனியின் பேங்க்பிரட்டின் கிழக்கில் ஹனூ பகுதியில் இருக்கும் ஷீஷா பாரில் ஜேர்மன் நேரப்படி நேற்று இரவு 10.15 மணிக்கு காரில் வந்த இனந் தெரியாத நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸார் உலங்குவானூர்தி மூலம் தேடி வருவதாகவும், தாக்குதல் நடந்து சில நிமிடங்களில் சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்புவதற்குள் உலங்குவானூர்தி மூலம் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ஜேர்மனியில் இரண்டு மதுபான விடுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒன்பது உயிர்களை பலிவாங்கிய நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மிரட்டல் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. கூடுதலாக, அவர் வலதுசாரி தீவிரவாத கொள்கைகள் கொண்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் நகரமான Hanauவில் இரண்டு மதுபான விடுதிகளில் வலதுசாரிக்கொள்கைகள் கொண்ட ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விடுதிகள் துருக்கிய மற்றும் குர்திஷ் இனத்தவர்கள் ஹூக்காக்கள் மூலம் புகைபிடிக்கும் இடங்களாம்.
அதாவது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இந்த குறிப்பிட்ட மக்களை குறிவைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏனென்றால், அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, மற்றும் அவர் எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றில், குறிப்பிட்ட சில மக்கள் அழிக்கப்படவேண்டும், ஏனென்றால் அவர்களை வெளியேற்றுவது இயலாத காரியமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பெயர் தொபியாஸ். R என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
அதே நபர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், அமெரிக்கர்களுக்கு ஒரு தனிப்பட்ட செய்தியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அதில், பூமிக்கடியில் இயங்கும் சில ராணுவ தளங்களில் சாத்தான் வணக்கமும் குழந்தைகள் துஷ்பிரயோகமும் நடப்பதாக ஆங்கிலத்தில் விலாவாரியாக விவரித்துள்ளார்.
அமெரிக்கா ரகசிய சமூகங்களால் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், மக்களை ஒன்று திரட்டி இந்த தளங்களை தாக்குமாறு அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், இந்த துப்பாக்கிச்சூட்டுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் தொபியாஸின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய தொபியாஸை தேடும் வேட்டையில் இறங்கிய பொலிசார், சம்பவம் நடந்ததற்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இரண்டு உயிரற்ற உடல்களைக் கண்டுபிடித்தனர்.
அவற்றில் ஒன்று தொபியாஸுடையது என்றும் மற்றொன்று அவரது தாயாருடையது என்றும் கருதப்படுகிறது.