
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளமைக்கு ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 43ஆவது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 20 மார்ச் வரை நடைபெறவுள்ள
நிலையில் நேற்றுத் தாம் வெளி
யிட்டுள்ள அறிக்கையிலேயே
அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்
ளவை வருமாறு:-
30/1 தீர்மானத்திற்கு இணங்க நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கை
யின் நடவடிக்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும் சில நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை, மனித உரிமை
மீறல்களை மீண்டும் மீண்டும் தூண்டக்கூடும் .
எனவே இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் விரும்பும் அமைதியான சமுதாயத்தையும், நிலை
யான வளர்ச்சியையும் அடைவ
தற்கு தீர்மானம் 30/1 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
30/1 தீர்மானத்தில் உள்ள கடமைகள் பல தசாப்தங்களாக ஆயுத மோதல்கள், பயங்கர
வாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் மரபுகளை வெல்ல முற்படும் அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளையும் பிரதிபலிக்
கின்றன.
இலங்கையில் 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் பல நிறுவனங்கள் சுயாதீனமாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே சித்திரவதை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச் சாட்டுகளையும் உடனடியாக
விசாரித்து வழக்குத் தொடரவும், நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார்.