ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்!

0
147

தமிழினப் படுகொலை நாள் மே 18 ஐ நினைவுகூரும் பொருட்டும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும் ஐரோப்பாவின் இதயம் என வருணிக்கப்படும் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.காலை 07.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்திருந்தனர். இவர்களுடன் மனிதநேயச் செயற்பாட்டாளர் திரு கஜன் அவர்கள் பரிஸ் நகரிலிருந்து வருகை தந்து தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படங்களை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைத்து அவர்களையும் எமது நிகழ்வில் கலந்துகொள்ள ஊக்குவித்தார். மற்றும் அவர்கள் எமக்காக குரல் கொடுக்கவும் வலியுறுத்தினார்.
கலந்து கொண்டிருந்த ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் தமது ஆதரவினைத் தெரிவித்து எமக்காகக் குரல்கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர். தமிழ்மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழின அழிப்பை நிறுத்தக்கோரி கீழ் குறிப்பிட்டுள்ள ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவும் ஐரோப்பிய பாராளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது.
1. பல தசாப்தங்களாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்துஇ ஐக்கிய நாடுகள் அவை மார்ச்இ 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடுஇ தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்குஇ கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்குஇ கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம்இ தேசியம்இ தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
.4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுஇ தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
starsberk 1

starsberk 2

starsberk 3

kajan 2

kajan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here