சிறிலங்கா அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை இது குறித்த விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்களும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பிலேயே உடனடியாக விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைமுறையில் உள்ள அரசியல் யதார்த்தங்களின் கீழ் அவற்றை செயற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்பதாலேயே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இரு தீர்மானங்களில் இருந்தும் விலகுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.