பிரான்சில் கொரனோ தாக்கம்: ஒருவர் பலி;15 பேர் பாதிப்பு!

0
624

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதார அமைச்சர் இத்தகவலை நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். பிரான்சில் நேற்று 80 வயதுடைய சீன சுற்றுலாப்பயணி கோரோனா தாக்கத்தில் உயிரிழந்திருந்தார். பின்னர் நேற்றைய நாளில் பிரான்சில் மற்றுமொரு நபர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்கும் நோக்கில் நோய்த்தாக்கத்துக்கு இலக்கான புதிய நபர் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. 

இது பிரான்சில் கண்டறியப்பட்ட 12 ஆவது நோய்த்தாக்கம். பிரான்சில் முதல் நோய்தாக்கம் கண்டறியப்பட்ட (ஐந்து நபர்கள்) (chalet of Contamines-Montjoie) குழுவில் இந்த புதிய நபரும் இருந்துள்ளார் எனவும், அவர் பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் எனவும் அறிய முடிகிறது.  

*கொரோனா தாக்கம்/ அறிகுறி/ சந்தேகங்கள் போன்றவற்றுக்கு 0 800 100 379 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here