வித்தியா படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பு ,திருகோணமலை, வவுனியா எங்கும் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
175

School
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கூட்டு வன்புணர்வுக் கொலைகாரர்களிற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என மட்டக்களப்பு ,திருகோணமலை, வவுனியா எங்கும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் நாமகள் தமிழ் வித்தியாலயம், லிங்கநகர் கோணலிங்க மகாவித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் படுகொலையை கண்டித்தும் கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோரியும் போராட்டம்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கக் கோரி கிழக்குப் பல்கலைக் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டகாரர்கள் “மாணவர் சக்தி மாபெரும் சக்தி”, “தண்டனை கொடு இல்லையேன் எம்மிடம் கொடு”, “தண்டனை கொடு உடனடியாகக் கொடு”, “சட்டத்தரணிகளே அநீதிக்கு எதிராக குரல்கொடுங்கள்”, உலகமே வித்தியாவிற்கு குரல்கொடு”, “ பெண்களுக்கான சட்டம் எங்கே? அவர்களுக்கான நிலைநாட்டப்படும் நீதி இதுதானா?” , “ இன்று வித்தியா நாளை?” “அரசே மாணவி வித்தியா விடயத்தில் உடன் நீதியை நிலைநாட்டு” “சட்டத்தரணிகளே காம வெறியர்களுக்கு துணைபோகாதீர்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை எந்தி மாணவி வித்தியா வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் சார்பில் எந்த சட்டத்தரணிகளும் ஆஜராக்க கூடாது, குற்றவாளிகளை தூக்கிலிட்டு சட்டத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்து” பெண்களுக்கெதிராக பாலியல் ரீதியிலான வன்முறைகளை தடுப்பதற்கு ஒன்றிணைவோம், கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்”

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையைக் கண்டித்து உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கக் கோரி இன்று வவுனியா மாவட்டத்தில் முழுமையான வழமைமறுப்பு

மாணவி வித்தியாவின் கொலையாழிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி மட்டக்களப்புமாவட்டத்தின் பட்டிருப்புக்கல்வி வலயத்திற்குட்பட்ட 14 ஆம் கிராமம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்,ஆசிரியர்கள் இன்று காலை கண்டனப்பேரணியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here