உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பல நாடுகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட ஹாலந்து அமெரிக்க கப்பல் தரையிறக்க தாய்லாந்தும் அனுமதி மறுத்துவிட்டது.
ஹாங்காங்கிலிருந்து இம்மாதம் முதல் தேதி புறப்பட்ட எம்.எஸ். வெஸ்டர்டாம்((MS Westerdam)) என்ற பயணிகள் சொகுசுக் கப்பல் தரையிறங்க ஏற்கெனவே ஜப்பான், தைவான், குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருந்தன.
இந்த நிலையில் குறித்த கப்பல் பயணிகளிடம் கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று ஹாலந்து அமெரிக்க நிறுவனம் விளக்கம் அளித்துள்ளபோதும் தாய்லாந்தும் கப்பல் தரையிறங்க அனுமதி மறுத்துள்ளது.
இதேவேளை தாய்லாந்தில் தாம் தரையிறங்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இருந்த பயணிகளும் ஊழியர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்