மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்: ஊடகங்கள் புறக்கணிப்பு!

0
217

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை பார்வையிட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் வருகைதந்த நிலையில் குறித்த சம்பவத்தை செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை வீடியோ புகைப்படம் எடுக்கவிடாது மாங்குளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தள்ளி குறித்த வளாகத்தை விட்டு வெளியேற்றிய நிலையில் குறித்த வளாக வாயில் கதவினை கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் மூடியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் குறித்த வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக குறித்த காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்

மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

சற்றுமுன்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அவர்கள் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்கள் வருகை தந்த நிலையில் குறித்த பகுதியில் புகைப்படம் வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here