டென்மார்க் தலைநகரில் கண்டனப்பேரணி!

0
161

a1

a4எமது உயிரினும் மேலான தாயக பூமியில் சிங்களப்பேரினவாதம் திமிருடன் மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களை நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாச்சார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிருபியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் முழுமையாக எமது
தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றது, இதை தடுப்பதற்காக டென்மார்க் அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி,டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து 18.05.15 அன்று டென்மார்க் பாராளுமன்றத்தின் முன்பாக ஒன்று கூடினர்.

அதனைத்தொடர்ந்து டென்மார்க் தலைநகர சபையை நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக வந்தடைந்தார்கள்.

a3

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், இனவழிப்புக்கு உள்ளான தமிழீழ மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பின் பேரணியாக வந்த மக்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினார்கள் அதனைத் தொடர்ந்து தமிழ் அமைப்புகளின பிரதிநிதிகளினதும் இளையோர் அமைப்பினரின் பேச்சுக்களும் கவிதைகளும் பாராளுமன்ற அமைச்சர்களின் உரை இடம்பெற்றது.

மேலும் டெனிஸ் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட இனவழிப்பை விழங்கப்படுத்தப்பட்டது டெனிஸ் மக்கள் ஆர்வமாக தமிழீழ மக்கள் மீது நிகழ்தப்பட்ட இனவழிப்பை அறித்துக் கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here