பிரான்ஸில் நிலைகொண்டுள்ள சியாரா புயல் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என பிரான்சு வானிலை ஆய்வு மையமான தெரிவித்துள்ளது.
மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஆரம்பித்த இந்தப் புயல், நேற்று திங்கட்கிழமை பரிஸ் உட்பட 45 மாவட்டங்களை சூறையாடிச் சென்றிருந்தது.
ஈஃபிள் கோபுரம் உட்பட பல பொது இடங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் கணிசமாக தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் நாளாக இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பிரான்சின் 12 மாவட்டங்களுக்கு இந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இரவு அல்லது நாளை புதன்கிழமை இந்த புயல் கரையை கடக்கும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.