ஈழத்திலும், உலகளவிலும் தனித்துவ திரைப்படமான ‘உயிர்ப்பூ’ திரைப்படம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், எழுத்தாளருமான மாமனிதர் முல்லை யேசுதாசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு நேற்று 08.02.2020 சனிக்கிழமை ஈழத்தின் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லை யேசுதாசன் என அறியப்பட்ட மாமனிதர் சந்தியோகு யேசுதாசன் அவர்கள் தொடர்பான படைப்புசார் பதிவுகள், நிறைந்த மக்கள் முன்னே பகிரப்பட்டன.
இயக்குநர் ந.கேசவராஜன், எழுத்தாளர் கருணாகரன், இசையமைப்பாளர் செயல்வீரன், கபிட்டல் பண்பலை அறிவிப்பாளர் ந.இராமநாதன், யோ.புரட்சி உள்ளிட்டோர் முல்லை யேசுதாசன் அவர்களின் போர்க்கால மற்றும் போருக்குப் பிந்திய கலை, இலக்கிய பங்கு பற்றி கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.
‘நீலமாகி வரும் கடல்’ சிறுகதை நூல் படைத்த முல்லை யேசுதாசன் அவர்கள், உயிர்ப்பூ, செவ்வரத்தம்பூ, கடலோரக்காற்று உள்ளிட்ட அநேக திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.