ஈழப்போராட்ட காலத்தில் கலைப்பங்களிப்பின் பிதா என்று கூட சொன்னால் ஈடாகாது. சினிமாவுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த முதுபெரும் பொக்கிஷம்…
படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய வேலைகளுக்குள்ளும் பிறருடைய வேலையிலும் கவனம் செலுத்தி மிகவும் உன்னிப்பாகவும் ஆக்ரோஷமாகவும் தனது பணிகளை செதுக்கும் கலைஞன்…
சிற்பிக்குள் இருக்கும் முத்தாக தன்னுள் பன்முக திறமையை வைத்து கடலும் வாழ்வுமாய் காலத்தோடோடி கலைமீது தன் சுவடுகளை பொறித்த ஈழத்து இலக்கியவாதியும் கூடவே…
எழுத்தாளராய் கவிஞராய் இலக்கியவாதியாய் நடிகனாய் இயக்குனராய் கதாசிரியராய் தொகுப்பாளராய் தன்னை இறுதி நிமிடம் வரை நிலை நிறுத்தியவர்…
பேச்சில் கோபம் தெரிந்தாலும் தன் பேச்சில் நகைச்சுவையும் கொண்டதொரு முதுமையான
இளைஞன் என்றே சொல்லத் தோணும்…
சினிமா சினிமா சினிமா இந்த சொல்லை மட்டுமே எந் நொடியும் உச்சரிப்பில் கொண்டதொரு மகத்தான கலைஞரை இழந்து விட்டோம்…
முல்லையின் மூத்த கலைஞரும் திரைப்பட இயக்குனரும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சாமி ஐயா என்று அழைக்கப்படும் முல்லை யேசுதாஸன் அவர்கள் இன்று காலை 4:30 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்….
(நன்றி:முல்லை வர்மன்)