மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாம் கட்டை பிரதேசத்தில் காவல்துறை அதிகாரி (பொலிஸ் சார்ஜன்ட்) ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை காவல் நிலையத்தில் கடமையாற்றும் 55 வயதான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக வீதி ஓரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி தனது பண்ணையைப் பார்வையிடுவதற்காக நேற்றிரவு (05) சென்றிருந்த நிலையில் இனந்தெரியாத நபர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக வவுணதீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.