
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதான பால்ராஜ் ஜெகதீஸ்வரன் என்ற விவசாயியான இவர் தனது வயலினை அறுவடை செய்வதற்காக பாலைப்பாணி மூன்று முறிப்பு சென்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இடியன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று
விசாரணையினை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.