வவுனியா பூந்தோட்டம் பகுதியினைச் சேர்ந்த 47வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை காணவில்லை எனத் தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார்.வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வவுனியா நகருக்கு செல்வதாகத் தெரிவித்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு அவரின் கணவர் தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்திய சமயத்தில் அவரின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. அன்றையதினம் மாலை வரை பல இடங்களில் தேடியும் குறித்த பெண்ணை காணவில்லை. பின்னர் 30.01.2020 வவுனியா காவல் நிலையத்தில் குறித்த விடயத்தினை தெரிவித்து கணவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
ஏழு நாட்கள் கடந்த நிலையிலும், இன்று வரை குறித்த பெண்ணை காணவில்லை. கடைசியாக இவர் வவுனியா நகருக்குச் சென்ற சமயத்தில் றோஜா வண்ண (பிங்) சேலை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அவரைக் கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
076 – 1560361 (மகன்) , 077 – 40112323 (கணவர்) , 076 – 6647509 (மருமகன்)