கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றது.
இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நாட்டில் சுதந்திர தினம் எதற்கு? என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி பதாதைகளையும் கறுப்பு கொடியையும் ஏந்தியவாறு உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.