நேற்று 02/02/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொர்சி தமிழ்ச்சோலை மண்டபத்தில் ” தொர்சி நகர நகரபிதா Guillaume Le Lay-Felzine அவர்களினால் பொங்கல் பானையில் அரிசி இட்டு
தமிழர் திருநாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக ஆராம்பிக்கபட்டது.
இந்நிகழ்வில் தொர்சி நகரபிதாவுடன் நகரசபை உறுப்பினர்கள்,
பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமார் , மற்றும் சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகள்,
ஆசிரியைகள், மாணவர்கள், தொர்சி வாழ் தமிழ்மக்கள் எனப் பலரும் கலந்து இவ்விழாவை சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து
அலங்கரிக்கப்பட்ட பள்ளி மண்டபத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன. பின்னர்
பொங்கல் விருந்துபசாரத்துடன் தமிழர் திருநாள் இனிதே நிறைவுபெற்றது.