பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கிய முதல் தமிழ் நபர் மரணமடைந்துள்ளார்.
Mitcham steatham பகுதியில் வியாபார நிலையம் வைத்திருக்கும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்த தங்கவேலாயுதம் கனேஷரத்தினம் (வயது-48)ரட்ணம் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவா் ஆவாா். இவா் கடந்த 23 வருடமாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.
கடந்த 28ம் திகதி தனது கடைக்கு தேவையான பொருட்களை சீன மொத்த விற்பனை நிறுவனம் ஒன்றில் கொள்முதல் செய்துவிட்டு அந்த மொத்த நிறுவனத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில் உணவருந்தி உள்ளார்.
இதையடுத்தே இவர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானார். இன்று காலை எட்டு மணிக்கு அவர் இறந்ததை மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
நேற்று வெளியான Sky செய்திச்சேவையில் Manchester பகுதியிலும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான ஒருவர் பற்றி செய்தி வெளியிட்டு உள்ளது.
மேலும் இச்செய்தி சேவையில் நாட்டு மக்களுக்கு அரசு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடா்பிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சீன நாட்டில் இருந்து பதப்படுத்தி இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்.
தொடர்ந்து மருத்துவ சம்பந்தமான முன் எச்சரிக்கைகளை நாடு முழுவதும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.