எங்கு பார்த்தாலும் சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய விடயமே பேச்சாக இருக்கிறது.
அந்தளவுக்கு கொரோனா வைரஸ் மிகப் பெரும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய தொற்றாகப் பரவி வருகிறது.
இந்த வைரஸ் தொற்றினால் சீன மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். சீனாவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அந்த நாட்டை விட்டு அவசரமாக வெளியேறுகின்றனர்.
உலகிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த நிலையில், சீன மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்ற இறை வனை நாம் மன்றாடுவோம்.
தவிர, இலங்கைக்கு வந்த சீனப் பிரஜை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது இலங்கை மக்களை அதிர்ச்சிக்கும் பயப்பீதிக்கும் ஆளாக்கியுள்ளது.
இதேவேளை இலங்கையில் வேறு சிலருக் கும் மேற்படி வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற ஐயப்பாடும் உண்டு.
இந்த ஐயப்பாட்டை வலிமைப்படுத்துவதாக இலங்கையின் தலைநகரில் ஏகப்பட்ட சீன மக்கள் தொழில் சார்ந்து தங்கியிருப்பதும் காரணமாகும்.
சீனாவின் முதலீடுகள் காரணமாக இலங்கைக்கும் சீனாவுக்குமான போக்குவரத்து அதிகரித்துள்ளமையால்,
கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் ஊடுருவக்கூடிய ஏதுக்கள் அதிகம் என் பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கொழும்பிலேயே ஏற்பட வாய்ப்புண்டு என்றும் எனவே அதுபற்றி நாம் அதிக கருசனை கொள் ளத் தேவையில்லை என்றும் நினைத்து எவ ரும் அசமந்தமாக இருந்துவிடக்கூடாது என் பதுதான் இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய முக்கிய விடயம்.
எதிலும் விழிப்பாக இருப்பது வருமுன்னர்க் காக்கும் செயலாகும்.
வந்த பின்னர் பார்ப்போம் என்றிருக்காமல், வரமுன்னர் பாதுகாப்பதே புத்திசாலித்தனம் என்பதால், கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான அடிப்படை விடயங்களை மக் களுக்கு எடுத்துரைத்து; அது தொடர்பில் மக் களை எச்சரிக்கைப்படுத்துவதும் விழிப் புணர்வை ஏற்படுத்துவதும் கட்டாயமான தாகும்.
இது விடயத்தில் சுகாதார வைத்திய அதி காரி பணிமனைகள் மிகத் தீவிரமாகச் செயற் பட வேண்டியுள்ளது.
மேற்படி நோய்த் தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களி டையே முன்வைப்பதன் மூலம் அது மக்கள் சமூகத்துக்கு மிகச் சுலபமாக எடுத்துச் செல்லப்படும்.
ஆகையால் பாடசாலைகள் தோறும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை வழங்கு கின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும்மேலாக, இத்தகைய கொடிய நோய்த் தொற்றுகளில் இருந்து மக்கள் சமூகத்தைக் காப்பாற்ற இறை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் அவசியம் என்பதும் இங்கு நினைவுபடுத்தற்குரியது.
(வலம்புரி)