முல்லைத்தீவு நபர் ஒருவருக்கு கொரோனா எனச் சந்தேகம்: மக்களுக்கு எச்சரிக்கை!

0
381

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இன்று (28) காலை சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்திய சாாலை, வட.கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதுளை, , குருநாகல், கரகம்பிட்டிய, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், இரத்தினபுரி, ஆகிய பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பரிசோதனை செய்துக்கொள்ள முடியும் என்றும் குறித்த பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலைகளில் அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here