ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான விண்ணுந்து ஒன்று ஆப்கானிஸ்தான் கஹஷ்னி மாகாணத்தின் டெஹ் யாக் மாவட்டத்தில் இன்று (27) திங்கட்கிழமை வீழ்ந்து நொருங்கியுள்ளது.
இதன்போது விண்ணுந்தில் 83 பேர் பயணித்துள்ளனர்.
பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விண்ணுந்து விபத்து தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இடம்பெற்றதால் உயிர் சேத விபரம் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.