தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு இன்று 25.01.2020 சனிக்கிழமை ஆரம்பமானது.
பிரான்சில் தற்போது கடும் குளிரானகாலநிலை நிலவுகின்ற போதும் மாணவர்கள் ஆர்வத்தோடு தேர்வில் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.
இம்முறை அரையாண்டுத் தேர்வில் பாலர்நிலை மாணவர்களுக்கான தேர்வும் முதன்முறையாக இடம்பெறுகிறது எனவும் பிரான்சு ரீதியில் பாலர் நிலை முதல் வளர்தமிழ் 12 வரை 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுகின்றனர் எனவும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
பாலர் நிலைக்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு கடந்த ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு முன்னோடியாக வருடாந்தம் அரையாண்டுத் தேர்வு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு – ஊடகப்பிரிவு)