பிரான்சு பரிசில் பணிப் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பல பகுதிகள் முடக்கம்!

0
462

இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசின் பல பகுதிகளை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதால் இந்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. Place de la République பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளதால், இன்று காலை 6 மணி முதலே அப்பகுதி பொதுமக்கள் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் Place de la République இல் இருந்து,  Concorde வரை தங்கள் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதால், அவர்கள் செல்லும் வழியில் உள்ள பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொடருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 

ChampsElysées, l’Etoile, l’Elysée, Matignon, l’Assemblée Nationale, Sénat, Notre Dame, Tuileries,l’Opéra,ministère de la Justice,Trocadéro,Champ-de-Mars, forum des Halles, Saint-Lazare,Grands Boulevards

ஆகிய பகுதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதிகள் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here