இறந்தும் உடல் உறுப்புத் தானம் மூலம் 7 பேரின் உடலில் வாழும் இளைஞர்!

0
472

தமிழகம் இராமநாதபுரத்தில் விபத்தில் சிக்கிய சரத்குமார் என்ற இளைஞர் வைத்திய சாலையில் அனுமதித்த பின் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இளைஞரின் உடல் உறுப்புகள் உலங்குவானூர்தி மற்றும் நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவன் இறந்து ஏழு பேரின் உடலில் உயிர் வாழ்வதாக அவனது பெற்றோர் கூறுகின்றனர். தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானமாக வழங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

உடல் உறுப்புத் தானம் செய்வது மிகப் பெரிய உதவியாக இருக்கும் எனவே நமது இறப்பிலும் ஒருவரேனும் உயிர் வாழட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here