2020 ஆம் ஆண்டு நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஒரு வெற்றியாண்டாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழ்த் தேசியம் மீளவும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆண்டில் அடியெடுத்து வையுங்கள்.
தமிழ்த் தேசியத்தை மீளவும் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பினை வரலாறும் காலமும் மீள தமிழ் இளைஞர்களின் கைகளில் கொடுத்துள்ளது.
தமிழ் இளம் தலைமுறையினரின் மூலம் மீண்டும் ஒரு அரசியல்ப் புரட்சிக்கான காலம் கனிந்துள்ளது. நிச்சயமாக அது இந்த ஆண்டு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
தமிழ் மக்கள் தமக்கான ஒரு சரியான அரசியல்த் தலைமையை உருவாக்குவதற்கு இந்த ஆண்டில் அதற்கான அஸ்திவாரத்தை அமைப்பார்கள். என்பதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
2009 ம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்ட மௌனிப்பிற்கு பின்னர்,
துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளின் கைகளில் சிக்கிக் கொண்டதால் தமிழ் மக்களின் உரிமைகள் விலைபொருள் ஆகியது.
அவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளை விற்றுப் பிழைத்தவர்களும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களும்,
சிங்கள பேரினவாத அரசுகளின் ஏவற் பேய்களாக செயற்ப்பட்டவர்கள் எல்லாம்
தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று வெட்கமின்றி கூறும் போது…!
தமிழீழத்தேசியத்தலைவரினால் பேச்சுவார்த்தை மேடைகளில் முன் வைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான அரசியல்த் தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்களிடத்தில் தெளிவாக முன்நிறுத்தி செயற்படும் ஒரு அரசியல் இயக்கமான #கஜேந்திரகுமார் தலைமையிலான #தமிழ்த்தேசியமக்கள்_முன்னணி இந்த ஆண்டு தனது அரசியற் கொள்கைக்கு மக்கள் மட்டத்தில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் ஆண்டாக இந்த ஆண்டு அமையவிருப்பதால் நிச்சயமாக தமிழ்த் தேசிய அரசியலில் இது ஒரு ஆரம்பப்புள்ளியாக அமையும்.
எனவே என் தமிழ் உறவுகளே வரலாற்றுத் தேவையை உணர்ந்து இந்த ஆண்டில் மாற்றம் வரும் என்று முழுமையான நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த ஆண்டு செயற்படுவோம், என்று உறுதியெடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்…!
இளைஞரணி.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.