தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்று வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. இம் முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர். இந்தப் போட்டியில் விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப் பட்டன. அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது. காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு, யாழ்., தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் இருந்தது.
தொடர்ந்து 5 வருடங்களாக வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞன் #பிரஷாந்…
வல்வெட்டித்துறைக்கே உரித்தான.
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள்…!!!
இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வல்வை மண்ணையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றும் சாதனையை படைத்துள்ளார்.
வாழ்த்துவது சுலபம் ஆனால் இப் பட்டத்தை உருவாக்கும் செலவும், நுட்பமுறையும் இங்கு முதலிடத்தை பெற்றுள்ளது என்பது தான் உண்மை.

