யாழ். மானிப்பாய், உடுவில் பகுதிகளில் சிறிலங்கா படையினர் வீடு வீடாகச் சோதனை!

0
559

யாழ்ப்பாணம், மானிப்பாய், உடுவில் பகுதிகளில் நேற்று அதிகாலை சிறிலங்கா இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். 

வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இராணுவத்தினர் வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட னர்.

“தேடப்படும் நபர்கள் யாராவது உள்ளனரா” என்று தேடி வருவதாக வீட்டு உரிமை யாளர்கள் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

வீதியால் சென்றவர்களும் சோதனை செய்யப்பட்டே தொடர்ந்து செல்ல அனுமதிக் கப்பட்டனர். இராணுவத்தினரின் திடீர் சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சத் துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.                                             

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here