மட்டக்களப்பு எல்லைத் தமிழ்கிராமத்தில் வீசிய நாற்றத்தால் ஊரே பரபரப்பு!

0
433

மட்டக்களப்பு மாவட்டம் அம்பாறை மாவட்ட எல்லைத் தமிழ்கிராமமான துறைநீலாவணை பாதையான நாவிதன்வெளி ,துறைவந்தியன்மேடு கிராமத்தினை இணைக்கும் பாதையோரம் நீண்ட தூரம்வரை இரூமருங்கிலும் இன்று அதிகாலை அம்பாரை மாவட்டத்தின், மருதமுனை முஸ்லிம் கிராமத்திலிருந்த அத்தனை கோட்டல் ,வீடு கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நேற்று வெள்ளிக்கிழமை மருதமுனை கடைகள் பூட்டிய நேரம் தயார் செய்து, மூடைக்கணக்கில் இன்று அதிகாலை நேரம் கொட்டியுள்ளார்கள்.

துறைநீலாவணை வாழ் தமிழ்மக்கள் கடந்த பத்துநாட்களாக திருவெம்பாவை ,திருப்பள்ளியெழுச்சியில் அதிகாலை எழும்பியதால் நேற்று இறுதி நாள் என்பதால் இன்று அசந்து உறங்கிய நேரம் வீதியோரம் மருதமுனை கழிவுகளான மாட்டு இறைச்சி எலும்பு ,தோல்,கோழியிறைச்சி கழிவு ,வீடுகளின் அழுகிய பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டு,,துறைநீலாவணை வீதியோரம் எறிந்து சென்றுள்ளார்கள்.

இன்று அதிகாலை ஒரு வித வாடை ஊரை சுற்றி பரவியதால் பொதுமக்கள் மூக்கிற்கு துணியை கட்டி வீதியை தேடிய போது பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி இத்தனை கழிவுகள் எப்படி எமது ஊரில் வந்தது எனும் ஆச்சரியத்துடன் தேடிய பொழுது கழிவை கொட்டிய வாகனங்கள் வீதியோரம் வரை இழுத்துச்சென்று மருதமுனையை அடைந்த அத்தனை அடையாளங்களுடன் காணப்பட்டது.

இவ்வாறன நடவடிக்கை இனமுறுகலை ஏற்படுத்தும்,செயற்பாடுகளே இப்படி கழிவுகளை அவர்களது கடைகள் பூட்டப்படும் வெள்ளிக்கிழமை நாட்களில் சேகரித்து வைத்து அதிகாலை நேரம் வீதியோரம் வீசிவிட்டு செல்வது வழமையான நடவடிக்கையாகும்.மட்டக்களப்பு ,கல்முனை,களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைகளில் இந்த மாதம் அதிக டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காலத்தில் இப்படியான ஈனத்தமான கேவலமான நடத்தைகளை எந்த மார்க்கத்தை தூய்மையாக பின்பற்றுபவர் இவ்வாறன அருவருப்பான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

இந்த கழிவுகள் டெங்கு நோய் மாத்திரம் அல்லாமல் இங்குள்ள ஆறுகளின் நீரை சென்றடையும் சுவாசிக்கும் காற்றால் வாந்திபேதி ,நிமோனியா ,வயிற்றோட்டம் ஏற்படக்கூட சந்தர்ப்பம் உள்ள போது நாகரிகமடைந்த எந்த ஒரு மனிதசமுதாயமும் இப்படியான துர்நடத்தைகளில் ஈடுபட மாட்டார்கள். மனித உணர்வுகளை மதித்து பொருப்புணர்ச்சியுடன் இன உற்றுமை கட்டியெழுப்ப வேண்டியது,அணைவர் தார்மிக பொறுப்பாகும்.

நன்றி
ஹரன் ரெட்ணதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here