ஈரானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழத்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.
இதற்கு ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடா, அமெரிக்க நாடுகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தியில்,
“பதற்றம் நிறைந்த இராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.