படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 11 ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில்!

0
448

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 11வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் உட்பட ஊடகவியலாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here