ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து உக்ரைன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் 180 பயணிகளுடன் உக்ரைன் நாட்டின் போரிஸ்பில் நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. முதற்கட்ட தகவலின்படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே உக்ரைன் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இறந்துவிட்டதாக ஈரானின் அவசர மருத்துவ சேவைகளின் தலைவர் பிர்ஹோசெய்ன் லிவண்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இடம்பெற்ற இந்த விமான விபத்தில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசத் தொலைக்காட்சி இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.