ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படைத் தளங்களின் மீது ஈரான் நடத்திய 25 இற்கு மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 80 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, ஈரான் இராணுவ தளபதி சுலைமானீ மீது தாக்குதல் நடத்திக் கொன்றது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று சுலைமானீயின் இறுதி ஊர்வலம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பென்டகன் உறுதிசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.