நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முல்லைதீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.