கல்முனையில் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பலி!

0
327

பாதுகாவலர்களின் கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பலியான துயரத்தால் கிராமமே சோகமயமானது.

கடந்த 1 ம் திகதி  மாலைவேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனிளிக்காமல் நேற்று ஹரிகரன் துசேன்   எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனே மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடு ஒன்றில் பணி புரிந்து வருகின்றார் சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்ப்பத்தில் இத் துயரசம்பவம் நிகழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here