ஈராக்கிலிருந்து உடனடியாக வௌியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈராக்கின் பக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசிம் சொலைமணி மற்றும் ஈராக் இராணுவத் தளபதி அபு மகாதி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது. ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் ட்ரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது” என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவட் சரிஃப் கூறியுள்ளார்.