Canada Markham நகரில் வாகன விபத்தில் பலியான தமிழர்!

0
456

கடந்த செய்வாய்க்கிழமை (December 31) இரவு Markham நகரில் நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் சம்பவ இடத்தில் பலியானவர் தமிழர் எனத் தெரியவந்துள்ளது. Elgin Mills Rd & Ninth Line சந்திப்புக்கு அருகாமையில் மாலை 7:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மரணமானவர் 68 வயதான செல்லத்துரை மகேந்திரம் (குஞ்சன்) என குடுப்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பயணித்த வெள்ளை நிற Toyota Corolla வாகனம் மற்றும் ஒரு வாகனத்துடன் மோதியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. தாயகத்தில் சுதுமலை வடக்கு மானிப்பாயில் பிறந்த செல்லத்துரை மகேந்திரம் கனடாவில் சுதுமலை மக்கள் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர். Scarboroughவில் இயங்கிவரும் East Town Banquet மண்டபத்தில் முகாமையாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் Whitchurch-Stouffville நகரில் வசித்து வந்துள்ளார். இந்த விபத்து குறித்த விசாரணையில் Whitchurch-Stouffville நகரைச் சேர்ந்த 40 வயதான ஒரு ஆண் (Stanley Choy) சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அவர் போதையில் வாகனம் ஓட்டி மரணம் விழைவித்த (Impaired Operation Cause Death) குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் மீது மொத்தம் மூன்று குற்றச்சாட்டுக்கள் (Impaired Operation Cause Death, Operation – Blood Alcohol Concentration 80 Plus Causing Death,Dangerous Operation Cause Death) பதிவாகியுள்ளன. காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர், மீண்டும் January மாதம் 6ஆம் திகதி Newmarketஇல் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். York பிராந்திய காவல்துறையினருக்கும் விபத்து நிகழ்வதற்கான சந்தேகத்திற்கிடமான வாகனத்துக்கும் இடையிலான தொடர்பு காரணமாக, SIU எனப்படும் Ontario மாகாணத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு இந்த விபத்து குறித்த சூழ்நிலைகளை ஆராய்கின்றது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு York பிராந்திய காவல்துறையினர் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here