
இந்தோனேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த யாழ் இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவில் குறித்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தாக அங்கிருந்து யாழில் உள்ள உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் மருதனார்மடத்தினை சேர்ந்த கண்ணன் ஜேம்சன் என அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதையடுத்து சடலம் இன்று யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.