பெண் ஒருவர் செலுத்திய மகிழுந்து வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(3) காலை இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 72 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என பொலிசார் தெரிவித்தனர்.