தொண்டமனாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் பலி!

0
228

தொண்டமனாறு கடல் நீரேரியில் நண்பர்கள் ஐந்து பேருடன் நீந்திக்கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மந்திகை காந்தியூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன்( வயது26) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தொண்டமனாறு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் வேகமாக வெளியேறும் நீரின் சுழியில் அகப்பட்டே உயிரிழந்துள்ளார் என அறியப்படுகின்றது. உறவினர்களால் நீண்ட நேரம் தேடலில் ஈடுபட்டும் கண்டுபிடிக்க முடியாததால் சுழியோடிகள் சடலத்தை மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here