திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை திருகோணமலை கடற்கரை முன்றலில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சீறி ஞானேஸ்வரன் (கண்ணன்) மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள் .