விடுதலைப்போராளி சதீசுக்கு அஞ்சலி !

0
220

விடுதலைப்போராட்டத்தில் இளவயதிலேயே இணைந்து பல ஆண்டுகள் போராடி விடுதலைக்காக உழைத்து பின் பல வருடங்களாக பயங்கரவாத தடுப்புப்பிரிவால் சிறைவைக்கப்பட்டு விடுதலை செய்யப்படாமலேயே கைதியாகவே மரணித்துப்போன சுந்தரம் சதீசுக்கு

பா.உறுப்பினர் சி.சிறீதரன் தன் இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளார்.விடுதலைக்காக சிறையிருந்து அர்ப்பணித்த சுந்தரம் சதீசுக்கு ஏராளம் மக்கள் திரண்டு வந்து வணக்கம் செலுத்தியுள்ளனர்.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 13ம் திகதிகுளித்துக் கொண்டிருந்த நிலையில் கிணற்றடியில் வழுக்கி விழுந்தபோதிலும், இவரின் உடல்நிலையைக் கண்டுகொள்ளாத சிறை அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னரே வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 14ம் திகதி கொழும்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலையில் உயிரிழந்த நான்காவது அரசியற் சிறைக் கைதி இவராவார்.

சிறை அதிகாரிகளின் அசமந்த போக்கே இம்முன்னாள் போராளியின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது என ஏனைய அரசியற் கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சயனைட் அருந்திய நிலையில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு காப்பாற்றப்பட்ட இவர், மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
jeil 1

jeil 2

jeil 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here