இன்று (30/12/2019) கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கண்டனப்போராட்டம் ஒன்று காலை பத்து மணிக்கு நடைபெற்றுள்ளது.
ஆயிரம் நாட்களைத் தாண்டி , தம் உறவுகளை தேடும் ஏதிலித்தமிழர்களை அவர்கள் தேர்வு செய்து நடாளுமன்றம் அனுப்பியவர்கள் கண்டுகொள்ளவில்லை.
தமிழரசுக் கட்சியினர் தமது 70 வருட சாதனைகளை முதலில் யாழ்ப்பாணத்திலும், பின்னர் கிளிநொச்சியிலும், நேற்று வவுனியாவிலும் கொண்டாடியுள்ளனர்.
நாளை இக்கொண்டாட்டம் கிழக்கு மாகாணம் வரை நீளும்.
கட்டிகை வெட்டி உற்சாகமாகத் தமது ஆதரவாளர்கள் சகிதம் கொண்டாட்ட மனோநிலையில் இருக்கும் தமிழரசுக் கட்சியனருக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் தமிழர்களின் சமகால வலிகள் எதுவும் கண்ணிற்கு தெரியாதது ஆச்சரியம்தான்.
70 வருட சாதனையும், நிறைவும் என இவர்கள் தம்பட்டமடித்தாலும், இவர்களின் துரோக வரலாற்றை தாண்டி பாமரத் தமிழனிற்கு இவர்களின் சாதனையாக எதுவுமே கண்ணிற்கு தெரியவில்லை .
ரோம் நகரம் பற்றியெரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னன் போல , தமிழர்கள் சமகால வாழ்வில் அல்லலுறும் போது , தமிழரசுக் கட்சியினர் சாதனை விழா கொண்டாடிவருவது வேதனையானது!