சிறிலங்கா அரசு வழங்கும் பாடல்களே பேருந்துகளில்: வருகிறது புதிய தடை!

0
1242

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பயணிகள் பேருந்துகளில் இசைக்கக்கூடிய பாடல்களின் தொகுப்பை வழங்க சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி அரச மற்றும் தனியார் பேருந்துகளில் சாரதிகள், நடத்துநர்கள் தமது விருப்பமான பாடல்களை ஒலிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நீண்ட தூரத்துக்குப் பயணிக்கும் பேருந்துகளில் அதிக இரைச்சலுடன் பாடல்களை ஒலிபரப்புவதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

சுமார் 15 ஆயிரம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பயணிகளிடமிருந்து தேசிய ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாம்.

அவர்கள் நூறு சதவீத பேரும் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்படும் பாடல்களால் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்” என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய தொகுப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.

அந்தத் தொகுப்பு அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்படும். சகல பேருந்துகளிலும் 2020 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அந்தப் பாடல்களின் தொகுப் பையே ஒலிபரப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பேருந்தில் பயணிகளுக்கு முக்கியமான செய்திகளைக் கொண்ட காணொளிகளும் ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here