10 வருடங்களுக்குப் பிறகு தமிழீழத்தில் ஏற்பட்ட முழுமையான சூரிய கிரகணத்தால் தமிழர் தாயகம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இன்று காலை 8.09க்கு ஆரம்பமாகிய இந்த சூரிய கிரகணம், 11.25 வரையான 3 மணித்தியாலங்களுக்கு நீடித்தது.
இது 3 நிமிடங்கள் மாத்திரம் முழுமையான கிரகணமாக இலங்கைக்கு தென்படும் என்று ஆர்த்தர் சி கிளார்க் மையம் தெரிவித்தது.
சிறுது சிறிதாக சூரிய ஒளி குறைவடைந்து சற்று நேரம் முழுவம் இருளாகியதை காணக்கூடியதாக இருந்தது.
சூரிய கிரகணத்தை வெறுங் கண்களாலோ அல்லது வெயிலுக்கு அணிகின்ற கண்ணாடிகளைக் கொண்டோ நேரடியாக பார்ப்பது ஆபத்தானது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
பலர் நீருள்ள மண்சட்டி வழியாக கிரகணத்தை பார்த்ததுடன், உலக்கை, அம்மிக் குழவி போன்றவற்றை நீருள்ள பாத்திரத்தில் நிலையாக நிறுத்தி, அந்த அதிசயத்தை அவதானித்தனர்.
மரங்களின் நிழல்களிலும் சூரிய கிரகணம் பன்மடங்காகக் காட்சியளித்தமை மற்றொரு அதிசயமாகப் பார்க்கப்பட்டது.